ஆப்கானிஸ்தானில் காட்டுமிராண்டித்தனத்தை கட்டவிழ்த்துவிட்ட தாலிபான்கள்

0 6954

ஆப்கானிஸ்தானில் தாலிபான் தீவிரவாதிகள் மீண்டும் காட்டுமிராண்டித்தனமான ஆட்சியை கட்டவிழ்த்து விட்டுள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் ஆட்சியைப் பிடித்துள்ள தாலிபான்கள் கடந்த முறை போலல்லாமல் அமைதியான ஆட்சியை வழங்கப் போவதாகத் தெரிவித்தனர். தங்களை எதிர்த்து சண்டையிட்டவர்களுக்கும் அவர்கள் பொதுமன்னிப்பு வழங்கினர். ஆனால் சில இடங்களில் அவர்களின் செயல்பாடுகள் கொடூரமாக மாறியுள்ளன. வீடுகளைச் சோதனையிட ஒத்துழைக்காதவர்களை துப்பாக்கியால் தாக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளன.

இதனிடையே ஜலாலாபாத் என்ற இடத்தில் தாலிபான்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நூற்றுக்கும் அதிகமானோர் ஆப்கானிஸ்தான் தேசியக் கொடியுடன் ஊர்வலமாகச் சென்றனர். அவர்கள் மீது தாலிபான் தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியதில் 3 பேர் உயிரிழந்தனர்.

காபூல் விமான நிலையத்தில் தங்களை நோக்கி தாலிபான்கள் வந்து கொண்டிருப்பதாகவும், தங்களைக் காப்பாற்றும்படி அமெரிக்க வீரர்களிடம் ஒரு சிறுமி கதறி அழுவது காண்போரை கலங்க வைத்துள்ளது.

கோஸ்ட் என்ற இடத்தில் அமைதியான முறையில் போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது தாலிபான் அமைப்பைச் சேர்ந்த சிலர் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியதால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.

பெண்களுடன் அமர்ந்திருந்தவரை தடியால் தாக்குவதும், மக்கள் முன்னிலையில் தண்டனை வழங்குவது என மீண்டும் 20 ஆண்டுகளுக்கு பின்னோக்கிச் சென்று மீண்டும் அதே தவறுகளைச் செய்கின்றனர் தாலிபான்கள்.

ஆப்கான் தேசியக் கொடியை உயர்த்திப் பிடித்த உள்ளூர் செய்தியாளரையும், பர்தா அணியாத இளம்பெண்ணையும் அவர்கள் சுட்டுக் கொன்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments