ராகுல் காந்தியின் ட்விட்டர் கணக்கு முடக்கம்.. ட்விட்டர் லோகோ பறவையை வறுத்து டிவிட்டர் நிறுவனத்திற்க்கு அனுப்பிய காங்கிரஸ் கட்சியினர்..

0 2551
ராகுல் காந்தியின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டதை கண்டித்து ஆந்திரா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியினர் ட்விட்டர் லோகோவில் உள்ள பறவையை சமைப்பதாகக் கூறி பறவை ஒன்றை எண்ணெய் சட்டியில் வறுத்து வினோத முறையில் போராட்டம் நடத்தினர்.

பாலியல் பலாத்காரத்தால் உயிரிழந்த டெல்லி சிறுமியின் குடும்பத்தினருடனான புகைப்படத்தை ராகுல் காந்தி ட்விட்டரில் பகிர்ந்ததால் அவரது கணக்கு தற்காலிகமாக முடக்கப்பட்டு பின்னர் செயல்பாட்டுக்கு வந்தது.

இந்த நிலையில் ட்விட்டர் நிறுவனத்தின் இந்த நடவடிக்கையை கண்டித்து காங்கிரஸ் பிரமுகர் ஸ்ரீராஜ் தொண்டர்கள் சூழ ட்விட்டர் லோகோவில் உள்ள பறவையை வறுப்பதாகக் கூறி, மசாலா தடவப்பட்ட பறவைகளை எண்ணெய் சட்டியில் போட்டு வறுத்தெடுத்தார். பின்னர் அவற்றை ட்விட்டர் தலைமை அலுவலகத்துக்கு தபால் மூலம் அனுப்பினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments