ஆப்கானிஸ்தான் நிலவரம், இந்தியர்கள் மீட்பு பணி பற்றி மூத்த அமைச்சர்களுடன் பிரதமர் மோடி திடீர் ஆலோசனை

0 2281
டெல்லியில், பிரதமர் நரேந்திர மோடி, மூத்த மத்திய அமைச்சர்களுடன், திடீர் ஆலோசனை மேற்கொண்டார்.

டெல்லியில், பிரதமர் நரேந்திர மோடி, மூத்த மத்திய அமைச்சர்களுடன், திடீர் ஆலோசனை மேற்கொண்டார்.

தலைநகரில் உள்ள தனது அதிகாரபூர்வ இல்லத்தில், பிரதமரின் இந்த ஆலோசனை முன்னெடுக்கப்பட்டது. இதில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மூத்த அமைச்சர்களுடனான பிரதமரின் ஆலோசனைக் கூட்டத்தில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலும் கலந்து கொண்டார். ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் பணி, அந்நாட்டுனான வர்த்தக தொடர்புகளை கையாளும் விதம் போன்றவை குறித்து ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments