ரூ.1000 கோடிகள்.. தொட்டால் உதிரும் புட்டு கட்டுமானம்..! எல்லா பில்டிங்கும் இப்படித்தானா..?

0 12331
சென்னை புளியந்தோப்பில் தொட்டால் உதிரும் சிமெண்டு மற்றும் மணலால் தரமற்ற முறையில் குடிசைமாற்று வாரிய குடியிருப்பு வீடுகளை கட்டிக் கொடுத்த புகாருக்குள்ளாகியுள்ள பி.எஸ்.டி கட்டுமான நிறுவனம் ஏற்கனவே கட்டிக் கொடுத்துள்ள தடுப்பணை உள்ளிட்ட கட்டுமான பணிகளிலும் இதே போன்ற கோளாறுகள் காணப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சென்னை புளியந்தோப்பில் தொட்டால் உதிரும் சிமெண்டு மற்றும் மணலால்  தரமற்ற முறையில் குடிசைமாற்று வாரிய குடியிருப்பு வீடுகளை கட்டிக் கொடுத்த புகாருக்குள்ளாகியுள்ள பி.எஸ்.டி கட்டுமான நிறுவனம் ஏற்கனவே கட்டிக் கொடுத்துள்ள தடுப்பணை உள்ளிட்ட கட்டுமான பணிகளிலும் இதே போன்ற கோளாறுகள் காணப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

எழுதிவைத்த தமிழையே சிரமப்பட்டு படித்துக் கொண்டிருக்கும் கொங்கு நாடு கல்விக்குழும அறக்கட்டளையின் பொருளாளராக உள்ள இந்த தென்னரசுவை மேலாண் இயக்குனராக கொண்ட பி.எஸ்.டி. கட்டுமான நிறுவனம் தான், கையால் தொட்டால் , பட்டென உதிரும் வகைல் குடிசைமாற்று வாரிய வீடுகளை கட்டிக் கொடுத்த குற்றச்சாட்டுக்குள்ளாகி இருக்கின்றது.

தென்னரசுவின், பி.எஸ்.டி கட்டுமான நிறுவனத்தால் சென்னை புளியந்தோப்பு கேசவன்பிள்ளை பூங்கா பகுதியில் 251 கோடி ரூபாய் மதிப்பீட்டில் குடிசைமாற்றுவாரியத்திற்கு கட்டிக் கொடுக்கப்பட்ட அடுக்கு மாடிக் குடியிருப்பில் 864 வீடுகள் உள்ளன. தற்போது இந்தக் கட்டடத்தில் 250 வீடுகளில் மக்கள் குடியிருந்து வரும் நிலையில், பணிகளைச் சரியாக முடிக்கவில்லை என்றும், தரமற்ற கட்டுமானத்தால் சுவர்களில் உள்ள சிமெண்டு பூச்சு கையால் தொட்டாலே புட்டு போல உதிர்வதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் விரிவான ஆய்வுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இங்குமட்டுமல்ல விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் திரிமங்கலம் - தளவானூர் இடையே தென்பெண்ணை ஆற்றில் பிஎஸ்டி நிறுவனத்தால் கட்டப்பட்ட தடுப்பணை கடந்த ஜனவரி மாதம் வெள்ளப்பெருக்கின்போது இரண்டாக உடைந்தது.

கட்டி முடித்துத் திறக்கப்பட்ட நான்கே மாதத்தில் வெள்ளப்பெருக்கிற்கு ஈடு கொடுக்காமல் அணை உடைந்ததற்குத் தரமில்லாத கட்டுமானமே காரணம் எனக் குற்றஞ்சாட்டப்பட்டது. இது தொடர்பாகப் பொதுப்பணித் துறைப் பொறியாளர்கள் மீது நடவடிக்கை எடுத்த நிர்வாகம், அந்தப் பணிகளைச் செய்த பிஎஸ்டி கட்டுமாண நிறுவனத்தின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் அருகே ஒரத்தூர் - ஆரம்பாக்கம் ஏரிகளை இணைத்து 60 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய தடுப்பணை கட்டும் பணியிலும், அடித்தளம் தரமில்லாமல் அமைத்துள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதேபோல் செங்கல்பட்டு மாவட்டம் வாயலூரில் பாலாற்றில் 32 கோடி ரூபாய் மதிப்பில் கட்டியுள்ள தடுப்பணையிலும் அடிப்படை சரியில்லாததால் நீர் கசிவதாகக் புகார் எழுந்துள்ளது.

பி.எஸ்.டி நிறுவனம் சைதாப்பேட்டை தாடண்டர் நகரில் நூறு கோடி ரூபாய் மதிப்பீட்டில் 700 வீடுகள் கொண்ட பிரமாண்ட அடுக்குமாடி குடியிருப்பை ஒப்பந்தம் எடுத்து கட்டிமுடித்துள்ளனர். அதன் நிலை மக்கள் குடியேறிய பின்னர் தெரியவரும் என்று கூறப்படுகின்றது.

புதுக்கோட்டையில் 11 மாதங்களில் மருத்து வகல்லூரியை கட்டிக்கொடுத்த இந்த நிறுவனம் திருவள்ளூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட இடங்களிலும் மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணிகளும், பல்வேறு தடுப்பணை கட்டுமான பணிகள் என சுமார் 1000 கோடி ரூபாய்க்கு மேல் ஒப்பந்தம் எடுத்துள்ளதாக கூறப்படுகின்றது. எனவே பிஎஸ்டி நிறுவனத்தால் கட்டி முடிக்கப்பட்ட அனைத்துப் பணிகளின் தரம் குறித்தும் விரிவான ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன.

இந்த குற்றச்சாட்டு குறித்து நிறுவன பெயரில்லாமல் பி.எஸ்.டி நிறுவனத்தின் மேலாளர் தண்டபாணி வெளியிட்டுள்ள அறிக்கையில், இலவசமாக வீடு கட்டித்தருவதாக கூறிவிட்டு வீட்டுக்கு 1லட்சத்து 50 ஆயிரம் பணம் வாங்கிக் கொண்டு வீடு ஒதுக்கியதால் ஆத்திரம் அடைந்து மக்கள் வீடுகளை சேதப்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவுக்கு சிகிச்சை வார்டுகள் அமைப்பதற்காக பொருட்களை கொண்டு சென்றதில் வீடு சேதம் அடைந்ததாகவும், கட்டிடங்களை ஒன்றரை ஆண்டுகளாக ஒப்படைக்காமல் இருந்ததால் சமூக விரோதிகள் லிப்டை உடைத்து தூக்கிச்சென்றுவிட்டதாகவும், கட்டிட சுவர்களை சேதப்படுத்தியதாகவும் கூறப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments