பாகிஸ்தானில் டிக் டாக் மூலம் பிரபலமடைந்த பெண்ணின் ஆடைகளைப் பொது வெளியில் கிழித்த கும்பல்..

0 6690
பாகிஸ்தானில் டிக் டாக் மூலம் பிரபலமடைந்த பெண்ணை நூற்றுக்கணக்கான இளைஞர்கள் முற்றுகையிட்டு, ஆடைகளை கிழித்தெரியும் காணொளி அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

பாகிஸ்தானில் டிக் டாக் மூலம் பிரபலமடைந்த பெண்ணை நூற்றுக்கணக்கான இளைஞர்கள் முற்றுகையிட்டு, ஆடைகளை கிழித்தெரியும் காணொளி அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

பாகிஸ்தான் சுதந்திர தினத்தன்று இக்பால் பூங்கா அருகே நண்பர்கள் 6 பேருடன் படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்த டிக் டாக் பிரபலத்தை திடீரென ஏராளமான இளைஞர்கள் சூழ்ந்து கொண்டு, வலுக்கட்டாயமாகத் தூக்கி, மீண்டும் மீண்டும் மேல்நோக்கி வீசினர்.

அந்தக் கும்பலிடம் இருந்து பெண்ணை மீட்க பொதுமக்கள் போராடியபோதும், அந்த பெண்ணின் வளையல்கள் மற்றும் காதணிகளை பறித்த கும்பல் அவரது ஆண் நண்பரின் செல்போனையும் பறித்துச் சென்றனர்.

சுதந்திர தினத்தன்று பெண்ணுக்கு நேர்ந்த அவலத்துக்கு பல தரப்பினரும் கண்டனங்கள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments