குடிசை மாற்று வாரியக் குடியிருப்புக் கட்டட விவகாரத்தில் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை - அமைச்சர் தா.மோ.அன்பரசன்

0 2217
சென்னை புளியந்தோப்பு குடிசை மாற்று வாரியக் குடியிருப்புக் கட்டடத்தின் தரம் குறித்த சிறப்புக் குழுவின் அறிக்கையின் அடிப்படையில் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார்.

கட்டுமானப் பணிகள் தரமாக இல்லை எனக் கூறப்படும் கட்டடத்தைப் பார்வையிட்டபின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பொதுமக்களின் வேண்டுகோளை ஏற்றுச் சீரமைப்புப் பணிகளை விரைந்து முடித்து வீடுகளை ஒப்படைக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறினார்.

கட்டடம் பாதுகாப்பானது எனத் தெரியவந்தால் மக்கள் குடியமர்த்தப்படுவார்கள் என்றும், இல்லை என்றால் மக்களுக்கு மாற்று ஏற்பாடு செய்யப்படும் என்றும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments