மனவளர்ச்சி குன்றிய பெண்ணிடம் ஆபாச படங்களை காட்டி பாலியல் வன்கொடுமை செய்த பிஸ்கட் வியாபாரி..

0 3753
சென்னை கோட்டூர்புரத்தில், மனவளர்ச்சி குன்றிய பெண்ணிடம் ஆபாச படங்களை காட்டி, பாலியல் வன்கொடுமை செய்த பிஸ்கட் வியாபாரி கைது செய்யப்பட்டுள்ளான்.

சென்னை கோட்டூர்புரத்தில், மனவளர்ச்சி குன்றிய பெண்ணிடம் ஆபாச படங்களை காட்டி, பாலியல் வன்கொடுமை செய்த பிஸ்கட் வியாபாரி கைது செய்யப்பட்டுள்ளான்.

சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்த தினேஷ், கோட்டூர்புரத்தில் தனது மாமியார் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளான். அந்த குடியிருப்பில் 21 வயதான மனவளர்ச்சி குன்றிய பெண் இருந்துள்ளார்.

இந்நிலையில், அந்த பெண்ணை இரண்டாம் தளத்திற்கு வரவழைத்த தினேஷ், ஆபாச படங்களை காண்பித்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். இதுகுறித்து மைலாப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் புகார் அளித்ததின் பேரில், பிஸ்கட் வியாபாரி தினேஷை போலீசார் கைது செய்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments