திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர்கள், தங்களை விடுவிக்க கோரி கழுத்து மற்றும் வயிற்றை அறுத்து கொண்டு போராட்டம்..

0 2531
திருச்சி மத்திய சிறையின் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர்கள் தங்களை விடுவிக்க கோரி கழுத்து மற்றும் வயிற்றை அறுத்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி மத்திய சிறையின் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர்கள் தங்களை விடுவிக்க கோரி கழுத்து மற்றும் வயிற்றை அறுத்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் செயல்பட்டு வரும் அகதிகள் சிறப்பு முகாமில், 70க்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்கள் பாஸ்போர்ட் இன்றி வெளிநாடு செல்ல முயன்ற குற்றங்களுக்காக அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இலங்கை தமிழர்கள் சிலர் தங்களை விடுவிக்க கோரி தூக்க மாத்திரைகளை சாப்பிட்டும், மரத்தில் ஏறியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களில் 2 பேர் கழுத்து, வயிறை கத்தியால் அறுத்துகொண்ட நிலையில், 3 பேர் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments