உச்ச நீதிமன்ற கொலீஜியத்தின் பரிந்துரைகள் குறித்த ஊடக செய்தி அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது - நீதிபதி என்வி ரமணா

0 2162
உச்ச நீதிமன்ற கொலீஜியத்தின் பரிந்துரைகள் குறித்த ஊடக செய்தி அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது - நீதிபதி என்வி ரமணா

புதிய நீதிபதிகளை நியமிப்பது குறித்த உச்ச நீதிமன்றத்தின் கொலீஜியத்தின் பரிந்துரைகளை ஊடகங்கள் வெளியிட்டது தமக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது என தலைமை நீதிபதி என்வி ரமணா தெரிவித்துள்ளார். 

இது போன்ற செய்திகளை வெளியிடும் போது பொறுப்புணர்வுடன் ஊடகங்கள் நடந்து கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

நீதிபதிகளை நியமிப்பது என்பது ஒரு புனிதமான நடவடிக்கை என்றும் அது தொடர்பான செய்திகளுக்கு உரிய மரியாதை வழங்க வேண்டும் எனவும் கூறினார்.

இது போன்ற ஊடக செய்திகள் அதில் கூறப்படும் யூகங்கள் ஆகியவற்றால், திறமையானவர்களுக்கான பதவி உயர்வுகள் பாதிக்கப்படலாம் என்ற அவர், நீதிபதிகள் நியமன நடவடிக்கை தொடர்வதாகவும், அது குறித்த முடிவுகள் பின்னர் எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments