எம்எல்ஏக்களிடம் பேசும் விதம் பற்றி சபாநாயகர் அப்பாவுவை கலாய்த்த துரைமுருகன்..

0 4156
சட்டப்பேரவையில், சபாநாயகர் அப்பாவு, எம்எல்ஏக்களிடம் பேசும் விதம் பற்றி, அவை முன்னவரான துரைமுருகன், தனக்கே உரிய பாணியில், நகைச்சுவை உணர்வுடன் பேசியபோது சிரிப்பலை எழுந்தது.

சட்டப்பேரவையில், சபாநாயகர் அப்பாவு, எம்எல்ஏக்களிடம் பேசும் விதம் பற்றி, அவை முன்னவரான துரைமுருகன், தனக்கே உரிய பாணியில், நகைச்சுவை உணர்வுடன் பேசியபோது சிரிப்பலை எழுந்தது.

பட்ஜெட் மீதான விவாதத்தில் பா.ம.க எம்எல்ஏ நீண்ட நேரம் பேசியதால் குறுக்கிட்ட சபாநாயகர், விரைந்து முடிக்குமாறு கூறினார். அதற்கு ஜி.கே.மணி, தாமும் ஒரு ஆசிரியர், தாங்களும் ஒரு ஆசிரியர் என்பதால், தமக்கு கூடுதல் நேரம் வழங்க வேண்டும் என்றார்.

அப்போது குறுக்கிட்டுப் பேசிய அவை முன்னவர் துரைமுருகன், பாஜக எம்எல்ஏ வானதி பேசும்போது, நாமெல்லாம் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்றதாக குறிப்பிட்டு கூடுதல் நேரம் வழங்குவதாக கூறுகிறீர்கள் என்றார்.

திருநெல்வேலி எம்எல்ஏக்கள் யாராவது பேச வாய்ப்புக் கேட்டால் அவர்களுடன், திருநெல்வேலி பாஷையில் பேசுகிறீர்கள், இந்த உறவை எப்படி புரிந்து கொள்வது என துரைமுருகன் கேள்வி எழுப்ப, சட்டப்பேரவையில் சிரிப்பலை எழுந்தது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments