2 நாட்கள் ஆன நிலையிலும் தாலிபான்களின் அச்ச உணர்வு காரணமாக காபூலில் மக்கள் நடமாட்டம் குறைவு

0 2013
2 நாட்கள் ஆன நிலையிலும் தாலிபான்களின் அச்ச உணர்வு காரணமாக காபூலில் மக்கள் நடமாட்டம் குறைவு

ஆப்கனில் தாலிபான்கள் ஆட்சியை பிடித்து 2 நாட்கள் ஆன நிலையில், இயல்பு நிலையை கொண்டு வர முயற்சிகள் நடைபெற்றாலும் காபூலில் நிலையற்ற தன்மையே காணப்படுகிறது. 

காபூல் நகர வீதிகளில் பெண்களின் நடமாட்டம் மிகவும் குறைவாக காணப்பட்டது. எந்த நேரம் என்ன நடக்கும் என தெரியாததால் காபூல் நகர மக்கள் பெரும்பாலும் வீடுகளிலேயே முடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே பெண் செய்தியாளருக்கு நேரலையில் பேட்டி அளித்த தாலிபன் பிரதிநிதி இமாலுல்லா சமாங்கனி, அரசு பணியாளர்களை உடனடியாக வேலைக்கு திரும்புமாறு கேட்டுக் கொண்ட அவர், முந்தைய அரசு மற்றும் அமெரிக்காவுக்கு ஆதரவாக இருந்த அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்கப்படுவதாக கூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments