கேரளாவில் ராகுலை சந்தித்து மகிழ்ந்தார் சோனியா காந்திக்கு பிரசவம் பார்த்த நர்ஸ் ராஜம்மா..

0 3320
ராகுல் காந்தி பிறந்த போது சோனியா காந்திக்கு பிரசவம் பார்த்த நர்ஸ், ராகுலின் கேரள பயணத்தின் போது அவரை சந்தித்து ஸ்வீட் பரிசளித்து, கட்டிப்பிடித்து முத்தமிட்ட வீடியோவை காங்கிரஸ் கட்சி டுவிட்டரிலும் இன்ஸ்டாகிராமிலும் வெளியிட்டுள்ளது.

1970 ஆம் ஆண்டு ஜூன் 19 ஆம் தேதி டெல்லி ஹோலி ஃபேமிலி மருத்துவமனையில் ராகுல் பிறந்த போது, பணியில் இருந்த நர்ஸ் ராஜம்மா பல ஆண்டுகளுக்குப் பிறகு அவரை கேரளாவில் தமது வீட்டருகே சந்தித்து மகிழ்ந்தார்..

உங்களுக்கு முன்னரே எனக்கு ராகுலை தெரியும் என அங்கிருந்த காங்கிரஸ் தலைவர்களிடம் வேடிக்கையாக கூறிய ராஜம்மா, ராகுல் தனது மகன் என அவரது பாதுகாப்பு அதிகாரிகளிடம் கூறி பெருமிதப்பட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments