ஆப்கன் நிலைமை இப்படி ஆனதில் டிரம்ப் மற்றும் பைடனின் பங்கு என்ன? - விசாரணை நடத்தப்போவதாக அமெரிக்க எம்பிக்கள் அறிவிப்பு

0 2613
ஆப்கானிஸ்தானில் நடக்கும் நிகழ்வுகள் தங்களுக்கு மனவிரக்தியை ஏற்படுத்தி உள்ளதாக தெரிவித்துள்ள அமெரிக்க எம்பிக்கள், நிலைமை இந்த அளவுக்கு போனதில் அதிபர் பைடன் மற்றும் முன்னாள் அதிபர் டிரம்பின் பங்கு குறித்து விசாரணை நடத்தப்போவதாக தெரிவித்துள்ளனர்.

கடந்த 20 ஆண்டுகளாக குடியரசு மற்றும் ஜனநாயக கட்சி நிர்வாகங்கள் தொடர்ந்து எடுத்த தவறான முடிவுகளே ஆப்கனின் இப்போதைய நிலைமைக்கு காரணம் என வெளியுறவுக்கான நாடாளுமன்ற குழுவின் தலைவர் போப் மெனன்டஸ்  அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் கொள்கை மற்றும் உளவுத் துறையின் தோல்வியும் இதற்கு ஒரு காரணம் என அவர் தெரிவித்துள்ளார். முன்னாள் அதிபர் டிரம்பிற்கும் தாலிபன்களும் இடையே நடந்த சமரச பேச்சுவார்த்தைகள், அமெரிக்க படைகளை வாபஸ் பெற அதிபர் பைடன் எடுத்த முடிவு ஆகியன குறித்து தமது குழு விசாரிக்கும் என அவர் கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments