தனது மனைவியின் ஆபாச படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டல்.. கணவர் புகாரையடுத்து காவலர் பணியிடை நீக்கம்

0 5038
மனைவியின் ஆபாச படங்களை வெளியிடுவதாக மிரட்டல் விடுத்த காவலர் பணியிடை நீக்கம்

சென்னையில், தனது மனைவியின் ஆபாச படங்களை சமூக வலைதளங்களில் பதிவிடுவதாக மிரட்டுவதாக கணவர் அளித்த புகாரின் பேரில் காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மண்ணடியை சேர்ந்த பெண்ணுக்கும்- எண்ணூர் காவல் நிலைய காவலர் பெஞ்சமின் பிராங்க்ளினுக்கும் முறையற்ற உறவு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், 10 லட்சம் ரூபாய் தரவில்லை என்றால் மனைவியின் அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிடப்போவதாக காவலர் பெஞ்சமின் மிரட்டுவதாக அப்பெண்ணின் கணவர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்.

அதன்பேரில், காவலர் பெஞ்சமின் பிராங்க்ளின் மீது துறைரீதியான விசாரணை நடத்தப்பட்ட நிலையில், தற்போது பணியிடை நீக்கம் செய்து மாதவரம் துணை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments