வழித்தடத்தை காணவில்லை.. காவல் நிலையத்தை அதிரவைத்த புகார்..

0 2947
சென்னை மடிப்பாக்கத்தில், வழித்தடத்தை காணவில்லை என கூறி குடியிருப்பு வாசிகள் காவல்நிலையத்தில் வித்தியாசமான ஒரு புகாரை அளித்துள்ளனர்.

சென்னை மடிப்பாக்கத்தில், வழித்தடத்தை காணவில்லை என கூறி குடியிருப்பு வாசிகள் காவல்நிலையத்தில் வித்தியாசமான ஒரு புகாரை அளித்துள்ளனர்.

மடிப்பாக்கம் பஜார் சாலையை ஒட்டியுள்ள பாகீரதி நகருக்காக, பஜார் சாலையில் இருந்து ஜே.கே., சாலைக்கு வழித்தடம் அமைக்கப்பட்டது.

இந்த வழித்தடத்தை தனியார் சிலர் ஆக்கிரமித்து தடுப்புசுவர் அமைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், குடியிருப்பு வாசிகள் புகார் அளித்ததின் பேரில் வருவாய்துறையினர் ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பினர்.

இருப்பினும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாததால் குடியிருப்பு வாசிகள், வழித்தடத்தை காணவில்லை என கூறி மடிப்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments