தமிழகத்தில் பள்ளிகளை திறந்தால் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல் நெறிமுறைகள் வெளியீடு

0 9671

தமிழகத்தில் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் 9, 10,11 மற்றும் 12 ம் வகுப்புகளுக்கான பள்ளிகள் திறக்கப்படுவதால், அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

கிருமிநாசினி பள்ளி வளாகம் முழுவதும் ஆங்காங்கே வைக்க வேண்டும், ஒவ்வொரு வாரமும் மாணவர்கள் மற்றும், ஆசிரியர்களின் உடல்நலனை கண்காணிக்க பள்ளி நிர்வாகம் நடமாடும் மருத்துவ குழுவை பயன்படுத்த வேண்டும், தொற்று அறிகுறி இருக்கும் மாணவர்கள், ஆசிரியர்களை பள்ளிக்கு அனுமதிக்க கூடாது.

100 சதவீதம் ஆசிரியர்கள் தடுப்பூசியை செலுத்தியிருக்க வேண்டும். தகுதியுடைய மாணவர்களுக்கும் தடுப்பூசியை செலுத்தியிருக்க வேண்டும். 50 சதவீதம் மாணவர்கள் மட்டுமே வகுப்பில்  அனுமதிக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments