சோழிங்கநல்லூர் எம்எல்ஏ அலுவக வளாகத்தில் கட்டப்பட்டு வரும் சட்டவிரோத கட்டுமானத்தை இடிக்க மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

0 2194

சோழிங்கநல்லூர் எம்.எல்.ஏ. அலுவலக வளாகத்தில் கட்டப்பட்டு வரும் சட்டவிரோத கட்டுமானத்தை உடனடியாக இடிக்க சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பான மனு தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த போது, தனது அலுவலக வளாகத்தில் கூட்ட அரங்கத்தை கட்டுவதற்கு எம்எல்ஏ கோரிக்கை வைத்ததாகவும், அதை பொதுப்பணித்துறை செய்து கொடுக்காததால், எம்.எல்.ஏ.-வே சொந்த செலவில் கூட்ட அரங்கை  கட்டி வருவதாகவும் மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது.

அதற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள் இந்த விவகாரத்தில் தீவிரமான  அராஜக செயலுக்கான முகாந்திரம் இருப்பதாக கூறினர்.  சட்டத்தை உருவாக்குபவர்களே அதை கையில் எடுத்து செயல்பட முடியாது என்ற நீதிபதிகள் சட்டவிரோத கட்டுமானத்தின் மீது எடுத்த நடவடிக்கை குறித்து ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments