தாலிபன்களிடம் சரணடைய மாட்டேன்- ஆப்கன் முன்னாள் துணை அதிபர்

0 3250
தாலிபன்களிடம் சரணடைய மாட்டேன்- ஆப்கன் முன்னாள் துணை அதிபர்

தாலிபன்களிடம் சரணடையப் போவதில்லை என ஆப்கானிஸ்தானின் துணை அதிபராக இருந்த அம்ருல்லா சலேஹ் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

அங்கு துணை அதிபராக இருந்த அம்ருல்லா சலேஹ், காபூலில் இருந்து தப்பி வடகிழக்கில் உள்ள பஞ்ச்ஷிர் பள்ளத்தாக்கில் தலைமறைவாக உள்ளார். அதற்கு முன் ஆங்கிலத்தில் அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், தாலிபன்களை கடுமையாக எதிர்த்தவரும் தமது குருவுமான அகமது ஷா மசூதிற்கு ஒரு போதும் துரோகம் செய்ய மாட்டேன் எனவும் தம்மை ஆதரித்த லட்சக்கணக்கான மக்களின் விருப்பத்திற்கு எதிராக தாலிபன்களுடன் சேர மாட்டேன் எனவும் தெரிவித்துள்ளார். 

ஹிந்து குஷ் மலைச்சிகரப்பகுதியான பஞ்ச்ஷிர் பள்ளத்தாக்கில் அம்ருல்லா சலேஹும், அகமது ஷா மசூதின் மகனும் சேர்ந்து முன்னர் தாலிபன்களுக்கு எதிரான கொரில்லா போரில் ஈடுபட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments