காபூலில் இருந்து திக் திக் நிமிடங்களுடன் இந்தியா திரும்பிய தூதரகத்தினர்

0 2862

காபூலில் இருந்து இந்திய தூரதக அதிகாரிகளும், ஊழியர்களும் அபாயரமான சூழலில் புல்லட் புரூப் வாகனங்களில் திக் திக் நிமிடங்களுடன் மீட்கப்பட்டு இந்தியா கொண்டுவரப்பட்டனர் என வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

அசாதாரண சூழலில் காபூல் இந்திய தூதர் ருத்ரேந்திர தாண்டனும் இதர ஊழியர்களும் இந்தியா வர விமானம் அனுப்பிவைக்கப்பட்டது. வழக்கமாக இந்திய தூதரகத்தில் இருந்து காபூல் விமான நிலையம் செல்ல 20 நிமிடங்கள் கூட தேவைப்படாது. ஆனால், தாலிபன்கள் காபூல் முழுவதும் சாலைத் தடைகளை ஏற்படுத்தி இருந்தனர் எனவும் சவாலான நிலையில் மீட்கப்பட்டு அவர்கள் இந்தியா வந்தனர் என அமைச்சர் ஜெய்சங்கர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

இந்திய தூதரக அதிகாரிகள் விமான நிலையம் வரும் வழியில் உள்ள 15 செக்போஸ்ட்களிலும் தாலிபன், லஷ்கர், ஐஎஸ் ஹாக்கனி தீவிரவாதிகள் குழுமி உள்ளதாக உளவுத் துறை தகவல் கிடைத்தது. இந்த நிலையில் எந்த ஆபத்தையும் சமாளிக்கும் விதத்தில் 14 புல்லட் புரூப் வாகனங்களில் இந்திய தூதரகத்தினர் ITBP காவல் உதவியுடன் சுமார் ஒரு மணி நேரம் பயணித்து விமான நிலையம் வந்து சேர்ந்தனர்.

அமெரிக்கா தனது ஊழியர்களை மீட்பதில் தீவிரமாக இருந்த தால் அவர்களின் பாதுகாப்பு உதவி கிடைக்கவில்லை. எனவே, வழியில் உள்ள தீவிரவாதிகளை உள்ளூர் நபர்கள் சிலரை பேச வைத்து எந்த பிரச்சனையும் இன்றி இந்திய வாகன அணிவகுப்பு விமான நிலையம் வந்தது.15 ஆம் தேதி இரவு இந்தியாவில் இருந்து புறப்பட்ட சி-17 விமானம் மறுநாள் காலை தூதரக ஊழியர்கள் 45 பேர் மற்றும் தூதரகத்தில அடைக்கலம் தேடிய இதர இந்தியர்கள் உட்பட 120 பேரை சுமந்து இந்தியா திரும்பியது.

தூதரக அலுவலர்கள் இந்தியா திரும்பி விட்டாலும், காபூல் இந்திய தூதரகம் அதிகாரப்பூர்வமாக மூடப்படவில்லை .அங்குள்ள முக்கிய ஆவணங்கள் அழிக்கப்பட்டு, பணியாளர் எண்ணிக்கை குறைக்கப்பட்டு உள்ளூர் பணியாளர்களுடன் அது இயங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஹிண்டன் விமானப்படைத் தளத்தில் இருந்து மீட்பு பணிக்காக சென்ற இரண்டாவது சி-17 விமானம், காபூல் செல்வதற்காக தஜிகிஸ்தான் தலைநகர் துஷான்பேயில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments