கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம்

0 1889
கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம்

வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி, வெப்பச்சலனம் காரணமாக கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்றும் நாளையும் நீலகிரி, கோவை மற்றும் கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.

ஆகஸ்டு 20ஆம் நாள் தமிழகத்திலும் புதுச்சேரியிலும் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், ஆகஸ்டு 21, 22 ஆகிய நாட்களில் வட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

சென்னையில் அடுத்த இரு நாட்களில் ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்யக் கூடும் என்றும் தெரிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments