நடுக்கடலில் மீன்பிடி படகில் தீ விபத்து.. தவித்த கடலூர் மீனவர்கள்

0 1767

சென்னை அருகே நடுக்கடலில் மீன்பிடி படகில் ஏற்பட்டத் தீயை அணைத்து, படகில் சிக்கிய கடலூர் மீனவர்களைக் கடலோரப் பாதுகாப்பு படையினர் பத்திரமாக மீட்டனர்.

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 7 மீனவர்கள் சென்னை நீலாங்கரை அருகே ஆழ்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது திடீரெனப் படகில் தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து கடலோரப் பாதுகாப்பு படைக்குத் தகவல் அளிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு கப்பல் மற்றும் ஹெலிகப்டரில் விரைந்த கடலோரப் பாதுகாப்பு படையினர் படகில் ஏற்பட்டத் தீயை அணைத்து, 7 மீனவர்களையும்  மீட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments