பழுதாகிய மோட்டாரை சரிசெய்ய இறங்கி 100 அடி ஆழ கிணற்றில் சிக்கிய நபர்

0 2675

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே 100 அடி ஆழ கிணற்றில் சிக்கியவரை தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.

சின்னப்பன் புதூர் கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணியம் என்பவர் நேற்று மாலை 100 அடி ஆழமுள்ள  தண்ணீர் கிணற்றில் மோட்டார் பழுதாகியதை அடுத்து அதனை சரி செய்வதற்காக இறங்கியுள்ளார்.

பின்னர் வெளியே வர முடியாமல் தவித்த அவர் உதவி கேட்டு அலறினார். இதுபற்றி தகவல் அறிந்த உடுமலை தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து கிணற்றில் தவித்த சுப்பிரமணியத்தை பத்திரமாக மீட்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments