ஆப்கன் அகதிகளுக்கு அடைக்கலம் கொடுக்க விரும்பும் நாடுகள்..!

0 9887

ஆப்கானிஸ்தானில் வசிக்க விரும்பாத மக்களை அழைத்துக் கொள்ள பல்வேறு நாடுகளும் விருப்பம் தெரிவித்துள்ளன.

 2 ஆயிரம் ஆப்கன் அகதிகளை ஏற்றுக் கொள்வதாக ஆப்பிரிக்க நாடான உகாண்டா அறிவித்துள்ளது. முதற்கட்டமாக 500 பேர் உகாண்டாவின் என்டபே விமானநிலையத்தில் தரையிறங்கினர்.

இதேபோல் 20 ஆயிரம் ஆப்கானிய அகதிகளை ஏற்றுக்கொள்வதாக இங்கிலாந்து அறிவித்துள்ளது. நடப்பாண்டில் 5 ஆயிரம் பேருக்கு இங்கிலாந்தில் வீடு கட்டிக் கொடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. புதிய திட்டத்தின் படி ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த பெண்களுக்கும், சிறுமிகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும் என்று இங்கிலாந்து கூறியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments