ரஷ்யாவில் ராணுவ விமானம் சோதனை ஓட்டத்தின்போது விபத்து: 3 பேர் உயிரிழப்பு

0 1639

ரஷ்யாவில் ராணுவ விமானம் தீப்பிடித்து விழுந்து நொறுங்கியதில் மூவர் உயிரிழந்தனர்.

அந்நாட்டின் விமானப்படையை நவீனப்படுத்தும் நோக்கில் லியூஷின் ஐஎல்-112 வி என்ற புதிய விமானத்தை ரஷ்யா வடிவமைத்திருந்தது. வீரர்களை ஏற்றிச் செல்லவும், சரக்குகளை எடுத்துச் செல்லவும் புதிதாகத் தயாரிக்கப்பட்ட இந்த விமானம் சோதனை ஓட்டத்திற்காக குபின்கா விமானப்படைத்தளத்தில் இருந்து புறப்பட்டது.

விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் இயந்திரத்தில்  தீப்பிடித்து கீழே விழுந்து வெடித்துச் சிதறியது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த விமானி உள்பட 3 பேரும் உயிரிழந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments