ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற வீரர் நீரஜ் சோப்ராவுக்கு கடும் காய்ச்சல்

0 3943

ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற வீரர் நீரஜ் சோப்ராவுக்கு கடும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பாகவே காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போது, கொரோனா இல்லை என்பது தெரியவந்தது. அதனை தொடர்ந்து காய்ச்சலில் இருந்து குணமடைந்த அவர், டெல்லி செங்கோட்டையில் நடைபெற்ற 75-வது சுதந்திர தின நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

தற்போது நீரஜ் சோப்ராவுக்கு உடல்நலகுறைபாடு ஏற்பட்டுள்ள நிலையில், அவருக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று கூறப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments