ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்களை அழைத்துவர நடவடிக்கை: பிரதமர் மோடி ஆலோசனை

0 1466
ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்களை அழைத்துவர நடவடிக்கை; பிரதமர் மோடி ஆலோசனை

ஆப்கானிஸ்தானில் தவிக்கும் இந்தியர்கள் அனைவரையும் பாதுகாப்பாக மீட்டு வருவது குறித்து பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்புக்கான மத்திய அமைச்சரவைக் குழு ஆலோசனை நடத்தியது.

பாதுகாப்புக்கான மத்திய அமைச்சரவைக் குழு கூட்டம் பிரதமர் மோடியின் இல்லத்தில் நேற்று மாலை நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத்சிங், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.இந்தியர்களை ஆப்கானில் இருந்து பாதுகாப்புடன் அழைத்து வருவதைப் பற்றி பிரதமரிடம் விளக்கம் அளிக்கப்பட்டது.

ஆப்கானுக்கான இந்திய தூதர் உள்பட இதுவரை 192 பேர் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் பிரதமரிடம் தெரிவித்தனர்
இந்தியர்களை மட்டும் இல்லாமல் காபூலில் வாழும் சீக்கியர்கள், இந்துக்கள் உள்ளிட்ட அனைவரையும் பாதுகாப்புடன் இந்தியா அழைத்து வர வேண்டும் என்று மோடி வலியுறுத்தினார்.

அடுத்த சில நாட்களில் ஆப்கான் மக்களுக்கும் தேவையான உதவிகளை வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். இந்தியர்களையும், இந்தியாவிற்கு வர விரும்புவோரையும் பாதுகாப்பாக அழைத்து வரும் பணியை நேரடியாக பிரதமர் கண்காணிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments