பாதுகாப்பு விவகாரங்கள் மற்றும் ஆப்கானிலிருந்து இந்தியர்களை மீட்கும் பணி குறித்து - பிரதமர் ஆலோசனை

0 1872
பாதுகாப்பு விவகாரங்கள் மற்றும் ஆப்கானிலிருந்து இந்தியர்களை மீட்கும் பணி குறித்து - பிரதமர் ஆலோசனை

தலைநகர் டெல்லியில், பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழுவை கூட்டி, பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார்.

இதில், ஆப்கானிஸ்தான் விவகாரங்கள், தாலிபான்களின் போக்கு, அதுதொடர்பில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, பிரதமர் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், ஆப்கானிஸ்தானிலிருந்து இந்திய தூதர், தூதரக அதிகாரிகள் உள்ளிட்டோர் மீட்கப்பட்ட நிலையில், காபூல் நகரில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்பது குறித்தும், பிரதமர் தீவிர ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகின்றது.

பிரதமர் முன்னெடுத்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments