ஆப்கானிஸ்தானில் டுவிட்டர் தொடர்ந்து செயல்படும் - டுவிட்டர் அறிவிப்பு

0 2273
ஆப்கானிஸ்தானில் டுவிட்டர் தொடர்ந்து செயல்படும் - டுவிட்டர் அறிவிப்பு

ஆப்கானிஸ்தானில், டுவிட்டர் தொடர்ந்து இயங்கும் என டுவிட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானின் நிலைமை வேகமாக மாறிவரும் நிலையில், அங்குள்ள பொதுமக்கள், டுவிட்டர் பதிவுகள் மூலம், உதவிகள் மற்றும் நிவாரணம் கோருவதை காண முடிவதாக தெரிவித்துள்ளது.

பொதுமக்களின் நலனும், அவர்களது பாதுகாப்பும் முக்கியம் என்பதால், அதற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், டுவிட்டர் சேவையைத் தொடர முடிவெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அனைத்து டுவிட்டர் பதிவுகளையும் தொடர்ந்து கண்காணிப்பதாக கூறியுள்ள டுவிட்டர் நிறுவனம், வன்முறையை தூண்டும் பதிவுகளை நீக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments