அரசு ஊழியர்களுக்கு பொது மன்னிப்பு வழங்குவதாக தாலிபான்கள் அறிவிப்பு

0 3939

ஆப்கானிஸ்தானை கைப்பற்றியுள்ள தாலிபான்கள், அரசு ஊழியர்களுக்கு பொது மன்னிப்பு வழங்குவதாக அறிவித்துள்ளனர்.

மேலும், பெண் ஊழியர்கள் உட்பட அனைவரும் தமது பணிகளை, வழக்கம்போல் தொடரலாம் என்றும் தாலிபான்கள் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பான தாலிபான்களின் அறிக்கையில், அனைத்து அரசு ஊழியர்களுக்கும் பொது மன்னிப்பு வழங்கப்படுவதால், தங்களது வழக்கமான வாழ்வை நம்பிக்கையுடன் தொடங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

ஏற்கனவே, தாலிபான்கள் செய்தித் தொடர்பாளர் சுஹைல் ஷாகின், ஆப்கானிஸ்தான் மக்களின் உயிரும், சொத்துகளும் பாதுகாக்கப்படும் என்றும், மக்களை பழிவாங்க மாட்டோம் என்றும், உறுதியளித்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments