காபூலில் ஐஎஸ், லஷ்கர், ஜெய்ஷே தீவிரவாதிகள்!

0 2226

கடந்த சில நாட்களில் ஐஎஸ்,ஜெய்ஷே முகம்மது, லஷ்கரே தொய்பா உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளை சேர்ந்தவர்கள் ஆப்கன் தலைநகர் காபூலுக்கு வந்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

தாலிபன் கொடிகளுடன் இவர்கள் காபூலுக்கு வந்தாலும், அவர்கள் தாலிபன்களின் கட்டுப்பாட்டில் இல்லை என சொல்லப்படுகிறது. ஆப்கனில் இருந்து தீவிரவாத செயல்களை நடத்த அனுமதிக்க மாட்டோம் என தாலிபன்கள் அமெரிக்காவிடம் உறுதி அளித்துள்ளதால், வரும் நாட்களில் இந்த தீவிரவாதிகளை தாலிபன்கள் விரட்டி விடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாகிஸ்தானின் குவெட்டாவில் இருந்து தாலிபன் நிறுவனர் முல்லா ஓமரின் மகன் முல்லா யாகூப் வந்துள்ள நிலையில், முக்கிய படைத் தளபதியான அவரது தலைமையில் இந்த தீவிரவாதிகளை ராணுவ பலத்தை பயன்படுத்தி வெளியேற்றும் நடவடிக்கைகள் துவங்கும் என கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments