கஞ்சா விற்பனையை காட்டி கொடுப்பதாக கூரிய அதிமுக கிளை செயலாளர் வெட்டி கொலை

0 2234
கஞ்சா விற்பனையை காட்டி கொடுப்பதாக கூரிய அதிமுக கிளை செயலாளர் வெட்டி கொலை

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே கஞ்சா விற்பனை தொடர்பான தகராறில் அதிமுக பிரமுகர் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார்.

ஜனப்பன்சத்திரத்தைச் சேர்ந்த சிலம்பரசன் அதிமுக கிளை செயலாளராக இருந்து வந்துள்ளார். நேற்று நள்ளிரவு வீட்டின் அருகே கழுத்து, கை, கால் என உடல் முழுவதும் சரமாரியாக வெட்டப்பட்டு சிலம்பரசன் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்தார்.

அவரை கொலை செய்ததாக அதே பகுதியைச் சேர்ந்த ஆகாஷ், ரஞ்சித்குமார் என 2 பேர் போலீசில் சரணடைந்தனர். இருவரும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தவர்கள் என்பதும் அதனை போலீசில் காட்டிக் கொடுப்பேன் என சிலம்பரசன் மிரட்டியதால் கொலை செய்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments