11 மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை : மத்திய அரசு அனுமதி அளிக்கும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

0 1757

மத்திய அரசு அனுமதி அளித்தவுடன், 11 மருத்துவ கல்லூரிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.


சட்டப்பேரவையில் உறுப்பினர் ராஜன் செல்லப்பா, எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், 11 மருத்துவக்கல்லூரிகளில் நடைபெறும் கட்டுமான பணிகளை நேரடியாக ஆய்வு செய்துள்ளதாக கூறினார்.

ஒவ்வொரு கல்லூரிக்கும் 150 மாணவர்கள் என்ற விகிதத்தில் 1650 மாணவர்களை சேர்ப்பதற்கு, டெல்லி சென்று கோரிக்கை விடுத்ததாக கூறினார். விரைவில் மத்திய அரசு அதற்கு அனுமதி அளிக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments