சென்னையில் இருவேறு இடங்களில் வழிபறி செய்த கும்பலை , சி.சி.டி.வி காட்சி உதவியுடன் தேடி வரும் போலீசார்

0 1568
சென்னையில் இருவேறு இடங்களில் வழிபறி செய்த கும்பலை , சி.சி.டி.வி காட்சி உதவியுடன் தேடி வரும் போலீசார்

சென்னையில் இருவேறு இடங்களில் இளைஞர்களை தாக்கி வழிபறி செய்த கும்பலை  போலீசார் சி.சி.டி.வி காட்சிகளின் உதவியுடன் தேடி வருகின்றனர்.

வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த ஏ.சி. மெக்கானிக் திவாகர், இருசக்கர வாகனத்தில் அண்ணா நகர் பகுதியில் பால் விநியோகம் செய்து கொண்டிருந்த போது, 2 மர்ம நபர்கள் அவரை மடக்கி, ஒன்னேகால் சவரன் தங்கச் செயினை பறித்து கொண்டு தப்பியுள்ளனர்.

இதேபோல், சென்னை தரமணியில் சிபிடி கல்லூரியில் டிப்ளமோ படித்து வரும் விஷ்வ பாரத், நேற்று சொந்த ஊரான புதுக்கோட்டையில் இருந்து சென்னைக்கு வந்துள்ளார். பின்னர் தரமணியில் உள்ள கல்லூரிக்கு வந்தபோது, நுழைவு வாயிலில் நின்றிருந்த இருவர், விஷ்வ பாரத்தை வழிமறித்து கத்தியால் தாக்கியதுடன், செல்போனையும் பறித்துகொண்டு தப்பியோடி விட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments