பெகசஸ் உளவு குற்றச்சாட்டில் தங்களிடம் மறைப்பதற்கு எதுவும் இல்லை - மத்திய அரசு

0 1754

பெகசஸ் உளவு மென்பொருளால் ஒட்டுக்கேட்டப்பட்டதாக கூறப்படுவதில், நீதிமன்றத்தில் இருந்து தாங்கள் எதையும்  மறைக்கவில்லை என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பான விசாரணையில் தேசிய பாதுகாப்பில் எந்த சமரசமும் செய்து கொள்வதை தாங்கள் விரும்பவில்லை என தெரிவித்த நீதிபதிகள் ஆனால் தங்கள் போன் ஒட்டுக் கேட்கப்பட்டதாக தனிநபர்கள் புகார் தெரிவித்துள்ளனரே என்று கூறி அதற்கு அரசின் பதிலை கேட்டனர்.

அப்போது இவ்வாறு பதிலளித்த சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, தேசிய பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் பெகசஸ் வழக்கு தொடர்பான விவரங்களை ஆன்லைனில் வெளியிடுவதற்கு எதிர்ப்பும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments