வருமான வரி மீதான வட்டியை செலுத்த தடை கோரி நடிகர் சூர்யா தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

0 11413
வருமான வரி மீதான வட்டியை செலுத்த தடை கோரி நடிகர் சூர்யா தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

வருமான வரிக்கு வட்டி செலுத்துவதில் இருந்து விலக்கு கோரி நடிகர் சூர்யா தாக்கல் செய்த வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

நடிகர் சூர்யா வீட்டில் கடந்த 2010ம் ஆண்டில் வருமான வரி துறையினர் சோதனை நடத்தினர். இதன் அடிப்படையில் இரண்டு மதிப்பீடு ஆண்டுகளுக்கு 3 கோடியே 11 லட்சத்து 96 ஆயிரம் ரூபாய் வரி செலுத்த வேண்டும் என்ற வருமான வரித்துறை உத்தரவை, மேல்முறையீட்டு தீர்ப்பாயமும் உறுதி செய்தது. தீர்ப்பாயத்தில் தனது வழக்கிற்கு 3 ஆண்டுகளுக்கு பிறகு முடிவு காணப்பட்டதால், வருமான வரிக்கு சட்டப்படி மாதம் 1 சதவீதம் வட்டி வசூலிப்பதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கோரி கடந்த 2018 ம் ஆண்டு நடிகர் சூர்யா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, சோதனை நடந்த 45 நாட்களுக்குள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், ஆனால் சூர்யா தாமதமாக தான் கணக்கை தாக்கல் செய்தார் என்றும் வருமான வரி துறை தரப்பில் வாதிடப்பட்டது.

இந்த வாதத்தை ஏற்று கொண்ட நீதிபதி, எஸ்.எம்.சுப்பிரமணியம், வட்டி விலக்கு கோரி நடிகர் சூர்யா தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments