காபூலில் இந்திய தூதரக அலுவலகத்தில் இருந்து 120 ஊழியர்கள் பாதுகாப்பாக வெளியேற்றம்

0 1918

காபூல் விமான நிலையத்தில் இருந்து, இந்திய தூதரக ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் என 120 பேருடன் இந்திய விமானப்படை விமானம் இன்று காலை புறப்பட்டது.

ஆப்கானிஸ்தானில் போர் முடிவுக்கு வந்ததாக தாலிபன்கள் அறிவித்த நிலையில், அந்நாட்டில் இருந்து வெளியேறுவதற்காக ஆயிரக்கணக்கான பொதுமக்கள் காபூல் சர்வதேச விமான நிலையத்தில் திரண்டனர். விமானத்தில் முண்டியடித்துச் செல்ல முயன்ற பலரால் அங்கு குழப்பமான நிலைமை காணப்பட்டது.
breathe
விமானத்தைப் பிடித்துத் தொங்கிய 3 பேர் விமானத்தில் இருந்து விழுகிற வீடியோ காட்சிகள் ஊடகங்களில் வெளியாகி உலகையே அதிர்ச்சிக்கு ஆளாக்கின

விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு சம்பவங்களும் நடைபெற்றன, கூட்டத்தைக் கலைக்க அமெரிக்க ராணுவத்தினர் சுட்டதாகக் கூறப்படும் நிலையில் விமான நிலைய துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் உயிரிழந்தனர்.

விமான நிலையத்தை நோக்கிச் செல்லுபவர்களை தாலிபன்களும் சுட்டுத் தள்ளுவதாகக் கூறப்படுகிறது.

காபூல் விமான நிலையத்தில் விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருப்பதால், அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா உள்ளிட்ட நாடுகள், விமானப்படை விமானங்கள் மூலம் தங்கள் நாட்டவரை அழைத்து வருவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளன. விமான நிலையக் கட்டுப்பாட்டை வைத்துள்ள அமெரிக்க வீரர்கள் ராணுவ விமானங்களை மட்டும் அனுமதிக்கின்றனர். 

இந்திய விமானப்படையின் விமானம் ஒன்று நேற்றிரவு 46 பேரை மீட்டு வந்தது. இந்நிலையில் இந்திய தூதரக ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் உள்ளிட்ட 120 பேருடன் இந்திய விமானப் படை விமானம் ஒன்று காபூலில் இருந்து இந்தியா புறப்பட்டது. எஞ்சிய இந்தியர்கள் அனைவரையும் ஓரிரு நாட்களில் அழைத்து வர அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று மத்திய வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments