கோவில்களில் ஏற்கெனவே அர்ச்சகர்களாக உள்ளவர்களின் பணிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது - அமைச்சர் சேகர்பாபு

0 2340

ஆகமவிதிகளின் படியே கோயில்களில் இரண்டாம் நிலை அர்ச்சகர்கள் பணியமர்த்தப்படுவதாகவும், முந்தைய அர்ச்சகர்களை அரசு வெளியேற்றுவது போல அவதூறு செய்திகள் பரப்பபடுவதாகவும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு  குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அரசை பொறுத்தவரை கோயில்களில் இருந்து யாரையும் வெளியேற்றும் எண்ணம் இல்லை என்றும், ஏதேனும் அர்ச்சகர்கள் பணியை இழந்திருந்தால் அவர்களுக்கு மீண்டும் பணி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments