கொடைக்கானலில் சுற்றுலா வந்த இளைஞர்கள்-ஊர்மக்கள் இடையே மோதல் : இருதரப்பினர் தாக்கிக்கொள்ளும் பரபரப்பு சிசிடிவி காட்சி

0 4715
கொடைக்கானலில் சுற்றுலா வந்த இளைஞர்கள்-ஊர்மக்கள் இடையே மோதல் : இருதரப்பினர் தாக்கிக்கொள்ளும் பரபரப்பு சிசிடிவி காட்சி

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் சுற்றுலா வந்த இளைஞர்களும், ஊர்மக்களும் தாக்கிக்கொள்ளும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

அட்டுவம்பட்டிக்கு சுற்றுலா வந்த 5க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அங்கே தங்கியுள்ள நிலையில், நேற்றிரவு தீமூட்டி ஆடல் பாடலுடன் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செயல்பட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பொதுமக்கள் இளைஞர்களிடம் கேட்டபோது, இருதரப்பினரிடையே வாக்குவாதம் முற்றி மோதல் ஏற்பட்டது. இச்சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான நிலையில், ஊர்மக்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments