பைக் , கார் நேருக்கு நேர் மோதி விபத்து : தூக்கி வீசப்பட்ட தொழிலாளி - பரபரப்பு சிசிடிவி காட்சி

0 3702
பைக் , கார் நேருக்கு நேர் மோதி விபத்து : தூக்கி வீசப்பட்ட தொழிலாளி - பரப்பரப்பு சிசிடிவி காட்சி

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே குறுகலான சாலை வளைவில் சென்ற பைக் மீது கார் மோதியதில் பைக்கில் வந்தவர் தூக்கிவீசப்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

பவானிசாகர் இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த குமார் என்பவர் தொட்டம்பாளையத்தில் உணவகம் ஒன்றில் வேலை செய்து வருகிறார்.

மதியம் உணவகத்தில் இருந்து தனது பைக்கில் வீடு நோக்கிச் சென்றபோது, ரேடியோ ரூம் என்ற இடத்தின் அருகே எதிரே வந்த மாருதி ஈகோ கார் மீது மோதி தூக்கிவீசப்பட்டு குட்டிக்கரணம் அடித்து தன்னுடைய பைக் மீதே விழுந்தார்.

விபத்தில் குமார் படுகாயமடைந்த நிலையில், கார் ஓட்டுநரும் லேசாகக் காயமடைந்தார். சம்பவம் நடந்த இடம் குறுகலான, அதேசமயம் சற்று வளைவான பகுதி என்றும், தலைக்கவசம் அணியாமல் பைக்கில் வந்த குமார், வேகமாகவும் சாலையின் வலதுபுறம் ஏறியவாறும் வந்ததே விபத்துக்குக் காரணம் என்றும் அக்கம்பக்கத்தினர் கூறுகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments