காபூல் நிலவரம் : நடுவானில் பறந்த விமானத்தில் இருந்து கீழே விழுந்த 2 பேர் பலி - பதைபதைக்கும் காட்சி

0 4552

ப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் இருந்து, 2 பேர் கீழே விழுந்து பலியான வீடியோ வெளியாகி உள்ளது.

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றி இருப்பதால், பீதியில் ஏராளமானோர் அங்கிருந்து வெளியேற முயற்சித்து வருகின்றனர். இந்த நிலையில் காபூலில் விமானத்தின் டயர் அமைந்துள்ள பகுதியில் தொங்கியபடி பயணித்ததாக கூறப்படும் 2 பேர் கீழே விழுந்தனர்.

இதனிடையே காபூலில் இருந்து அமெரிக்க வீரர்களை ஏற்றிக் கொண்டு புறப்பட்ட அமெரிக்க விமானப்படை விமானத்தில் ஏறும் முயற்சியில் பலர் ஓடுபாதையில் கூட்டமாக ஓடிய மற்றொரு வீடியோ காட்சியும் வெளியாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments