அஷ்ரப் கனிக்கு அனுமதி மறுத்த தஜிகிஸ்தான் : எங்கே போனார் அஷ்ரப் கனி?

0 1977
அஷ்ரப் கனிக்கு அனுமதி மறுத்த தஜிகிஸ்தான்

ஆப்கனில் இருந்து தப்பிச் சென்ற அதிபர் அஷ்ரப் கனிக்கு தஜிகிஸ்தான் அனுமதி அளிக்காததால் அவர் ஓமனுக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது.

தலைநகர் காபூலை தாலிபன்கள் கைப்பற்றும் வேளையில் அவர் தமது குடும்பத்தினர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மொஹிப் ஆகியோருடன் தனி விமானத்தில் தஜிகிஸ்தானுக்கு தப்பி சென்றார்.

ஆனால் அவரது விமானம் தரையிறங்க தஜிகிஸ்தான் அரசு அனுமதி அளிக்கவில்லை என கூறப்படுகிறது. எனவே அவர் ஓமனுக்கு சென்றுவிட்டதாகவும், அங்கிருந்து அவர் அமெரிக்காவுக்கு செல்வார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தப்பிச் சென்ற அதிபர் அஷ்ரப் கனி தம்முடன் ஏராளமான பணத்தை எடுத்துச் செல்வதாக ரஷ்ய செய்தி நிறுவனமான ஸ்புட்னிக் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments