அதிகவேகமாக வந்த கார் பைக் மீது மோதி, தூக்கி வீசப்பட்ட நபர் பரிதாபமாக உயிரிழப்பு : பரபரப்பு சிசிடிவி காட்சி

0 2523
அதிகவேகமாக வந்த கார் பைக் மீது மோதி, தூக்கி வீசப்பட்ட நபர் பரிதாபமாக உயிரிழப்பு : பரபரப்பு சிசிடிவி காட்சி

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அதிகவேகமாக வந்த கார், முன்னால் சென்ற பைக் மீது மோதிய விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

தெற்குபாளையம் பகுதியில் வசித்து வரும் கருப்பையா, அவரது பைக்கில் மெடிக்கல் ஷாப்பிற்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த போது, நால்ரோடு பகுதியில் அதிவேகமாக வந்த ரெட் டாக்சி நிறுவனத்தின் வாடகை கார், முன்னால் சென்ற கருப்பையாவின் பைக் மீது திடீரென மோதியது.

அதில் அவர் தூக்கி வீசப்பட்டு தலையில் படுகாயமடைந்த நிலையில், அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே கருப்பையா உயிரிழந்தார்.

விபத்தை ஏற்படுத்திய கார் நிற்காமல் சென்ற நிலையில், ஓட்டுநர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments