ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற வீரர்-வீராங்கனைகளை தனது இல்லத்தில் சந்தித்த பிரதமர் மோடி

0 3566

டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய வீரர்களை தமது இல்லத்தில் சந்தித்த பிரதமர் மோடி அவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கினார்.

ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதலில் தங்கம், மகளிர் பளுதூக்குதல், மகளிர் ஹாக்கி, பேட்மின்டன், குத்துச்சண்டை உள்ளிட்ட போட்டிகளில் வெள்ளி, வெண்கலம் என மொத்தம் 7 பதக்கங்களை இந்தியா வென்றது.

அதற்காக நேற்று நிகழ்த்திய சுதந்திர தின உரையில் இந்திய ஒலிம்பிக் வீரர்களை புகழ்ந்த  மோடி, ஒட்டுமொத்த நாடும் அவர்களை பாராட்ட வேண்டும் என கேட்டுக் கொண்டார். இந்த நிலையில் டெல்லி லோக் கல்யாண் மார்க்கில் உள்ள தமது இல்லத்தில் மோடி அவர்களை சந்தித்து கவுரவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments