தமிழகத்தில் 6 மாதங்களுக்கு பிறகு திறக்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகள்

0 2524

தமிழகம் முழுவதும் 6 மாதங்களுக்கு பிறகு அனைத்து மருத்துவக்கல்லூரிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன.

கொரோனா பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் மருத்துவக்கல்லூரிகள் மூடப்பட்டிருந்த நிலையில் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில், இன்று முதல் 2ஆம் ஆண்டு முதல் 4ஆம் ஆண்டு வரையிலான மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த பிற படிப்பு மாணவர்களுக்கான கல்லூரிகளை திறக்க மருத்துவக் கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டது.

அதன்படி, சென்னை ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி, மதுரை அரசு மருத்துவக்கல்லூரி, திருச்சி கி.ஆ.பெ.விசுவநாதம் அரசு மருத்துவ கல்லூரி உள்ளிட்ட மருத்துவக்கல்லூரிகள் திறக்கப்பட்டன. நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments