ஆப்கன் வான்வழியை பயன்படுத்த வேண்டாம் - முக்கிய விமான நிறுவனங்கள் முடிவு

0 3662
ஆப்கன் வான்வழியை பயன்படுத்த வேண்டாம் என முக்கிய விமான நிறுவனங்கள் முடிவு

தாலிபன்கள் ஆட்சியை பிடித்துள்ள நிலையில், யுனைட்டட் ஏர்லைன்ஸ், பிரிட்டிஷ் ஏர்வேஸ், விர்ஜின் அட்லான்டிக் உள்ளிட்டமுக்கிய விமான நிறுவனங்கள், ஆப்கன் வான்வழியை பயன்படுத்த வேண்டாம் என முடிவெடுத்துள்ளன.

இதனால் அமெரிக்க-இந்தியா இடையேயான விமானப் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்படும் என யுனைட்டட் தெரிவித்துள்ளது. காபூல் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு மண்டலத்தில் 26 ஆயிரம் அடிக்கு குறைவாக பறக்க வேண்டாம் என அமெரிக்காவின் பெடரல் விமான போக்குவரத்து துறையும் கட்டுப்பாடு விதித்துள்ளது.

கனடா, ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகள் 25 ஆயிரம் அடிக்கு மேல் பறக்குமாறு தங்களது விமான நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளன. கொரியன் ஏர் லைன்ஸ் தங்களது சரக்கு விமானங்கள் மட்டும் ஆப்கன் வான்வழியை பயன்படுத்தும் என அறிவித்துள்ளது. யுஏஇ-ன் எமிரேட்ஸ் விமான நிறுவனம் ஆப்கானிஸ்தானில் விமான சேவையை நிறுத்தி வைத்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments