கடந்த ஆட்சியில் விதி எண் 110-ன் கீழ் கூறப்பட்ட திட்டங்களின் நிலை குறித்து அறிவிக்கப்படும் -நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

0 3101
கடந்த ஆட்சியில் விதி எண் 110-ன் கீழ் கூறப்பட்ட திட்டங்களின் நிலை குறித்து அறிவிக்கப்படும்

அதிமுக ஆட்சியில் விதி எண் 110-ன் கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை குறித்து பேரவையில் விரைவில் அறிவிக்கப்படும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

சட்டப் பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் உறுப்பினரின் கேள்விக்கு பதிலளித்த அவர், கடந்த ஆட்சியில் திட்டங்களுக்கு முறையாக நிதி ஒதுக்காததாலும், செயல்திறன் குறைந்ததாலும் உற்பத்தி கடன் அதிகரித்து பண வீக்கம் அதிகமாகியுள்ளதாக கூறினார்.

திட்டங்களுக்கான மதிப்பீட்டு தொகையில் 40சதவீதம் வரை வித்தியாசம் வந்துள்ளதாகவும் தெரிவித்தார். இதேபோன்று, மற்றொரு கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், கடந்த ஆட்சிக் காலத்தில் தகுதியான லட்சக்கணக்கான நபர்களுக்கு முறையாக முதியோர் உதவித்தொகை வழங்கப்படவில்லை எனக் குற்றம்சாட்டினார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments