சென்னையில் விலை உயர்ந்த பைக்குகளை குறிவைத்து திருடி வந்த 3 பேர் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் கைது

0 1792
சென்னையில் விலை உயர்ந்த பைக்குகளை குறிவைத்து திருடி வந்த 3 பேர் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் கைது

சென்னை அடுத்த அம்பத்தூரில் விலையுயர்ந்த பைக்குகளை குறி வைத்து கொள்ளையடித்து வந்த 3 பேர் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் கைது செய்யப்பட்டனர்.

அம்பத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து ஆர்15, கேடிஎம், பல்சர் போன்ற விலை உயர்ந்த இருசக்கர வாகனங்கள் திருடு போவதாக போலீசாருக்கு புகார் வந்தது. அதையொட்டி, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், பல்வேறு பகுதிகளில் இளைஞர்கள் அசால்ட்டாக பைக்குகளை திருடிச் சென்றது பதிவாகியிருந்தது.

இந்நிலையில், கள்ளிக்குப்பம் சோதனைச்சாவடி அருகே சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றித்திரிந்த 3 பேரை பிடித்து விசாரித்ததில், முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்த இளைஞர்கள், பைக் திருட்டில் ஈடுபட்டதை ஒப்புகொண்டனர்.

இதையடுத்து, அவர்களிடமிருந்து திருடப்பட்ட 14 விலை உயர்ந்த சுமார் 28 லட்சம் ரூபாய் மதிப்பிலான வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments