ஆப்கன் இந்தியர்களை மீட்க தயாராக இருக்கவும் ; ஏர் இந்தியாவுக்கு மத்திய அரசு உத்தரவு

0 6133
ஏர் இந்தியாவுக்கு மத்திய அரசு உத்தரவு

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருந்து இந்தியர்களை அவரசமாக மீட்டு கொண்டு வர இரண்டு விமானங்களை தயாராக வைத்திருக்குமாறு ஏர் இந்தியாவுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து காபூலில் இருந்து டெல்லிக்கு விமானங்களை இயக்குவதற்கான ஏற்பாடுகளை ஏர் இந்தியா தயார் நிலையில் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. அதற்காக முதலாவது விமானம் டெல்லியில் இருந்து இன்று இரவு எட்டரை மணிக்கு புறப்படுவதாக இருந்த நிலையில், அது முன்னதாகவே பகல் பன்னிரண்டரை மணிக்கு காபூலுக்கு புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே காபூலில் இருந்து 129 பயணிகளுடன் வந்த ஏர் இந்தியா விமானம் நேற்று இரவு டெல்லி வந்தடைந்தது. இந்த விமானத்தில் இந்திய மாணவர்கள், தொழிலதிபர்கள் மற்றும் ஆப்கன் எம்பிக்கள், அதிபர் கனியின் நிர்வாகத்தில் பணியாற்றிய பல ஆப்கானியர்கள் வந்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments