ஹைத்தியில் நிலநடுக்கத்திற்கு பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 300ஐ நெருங்கியது

0 2111

கரீபியன் தீவுகளில் ஒன்றான ஹைதியில் நில நடுக்கத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஆயிரத்து 297 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த சனிக்கிழமை அங்கு 7 புள்ளி 2 ரிக்டர் அளவில்  நில நடுக்கம் ஏற்பட்டது. தரைமட்டமான கட்டடங்களின் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடந்து கொண்டு இருந்த நிலையில் மற்றொரு பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

13 ஆயிரத்து 700 கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமானதில் ஆயிரத்து 297 பேரின் சடலங்களை மீட்டு உள்ளதாகவும், 5 ஆயிரத்து 700-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து உள்ளதாகவும் ஹைதி உள்நாட்டு பாதுகாப்பு குழு தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments