ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றியதன் எதிரொலி ; காபூல் விமான நிலையம் முன் திரண்ட ஆயிரக்கணக்கான மக்கள்

0 4470
காபூல் விமான நிலையம் முன் திரண்ட ஆயிரக்கணக்கான மக்கள்

ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றியதை அடுத்து அண்டை நாடுகளில் தஞ்சம் அடைய பொது மக்கள் காபூல் விமான நிலையம் முன் திரண்டனர்.

ராணுவ விமானங்களை தவிர்த்து பொது விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டதை அடுத்து மற்ற நாடுகளுக்கு செல்ல முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். விமான நிலையம் முன் திரண்ட ஆயிரக்கணக்கான மக்கள் விமான போக்குவரத்தை இயக்கக் கோரி கூச்சலிட்டனர்.

மேலும் இறுதி நேரத்தில் ரத்து செய்யப்பட்ட துருக்கி செல்லும் விமானத்தில் ஏறிய பயணிகள் விமானத்தை இயக்கக் கோரி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments